உறியடி என்கிற படத்தை இளைஞர்களை மையப்படுத்தி எடுத்து, அதில் நடித்தது மட்டும் இன்றி, இயக்கி, தயாரித்து... பல்வேறு போராட்டத்திற்கு பின் படத்தை வெளியிட்டு, ஒரே படத்தின் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர் விஜயகுமார். இவர் எப்போதுமே மனதில் பட்ட கருத்தை எந்த ஒரு தயக்கமும் இன்றி வெளிப்படையாக கூறுவார்.

இந்நிலையில் விஜயகுமார், மனவேதனையோடு ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில்  ’சமீப காலமாக நீட் தேர்வை எதிர்த்தும்,  மாணவி அனிதா போன்ற பல மாணவ மாணவிகளின் கனவு, கானல் நீராக மாறிவிட கூடாது என்று தமிழகத்தில் பலர்  குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் அதை குலைப்பது போன்று  இந்த நேரத்தில் "ஜிமிக்கி கம்மல்" என்ற பாடலை ஒரு சிலர் ட்ரெண்ட் செய்கின்றார்கள், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதனை தவிர்க்க வேண்டும் என்றால் , அந்த பாடலில் நடனமாடிய பெண்ணையே நீட் தேர்வை எதிர்த்து பேசி ஒரு வீடியோ வெளியிட சொல்ல வேண்டும் போல...  என சவுக்கடி கொடுத்ததுபோல் கூறி இதுபோன்று நடப்பது மாணவர்கள் போராட்டத்தை மறக்கடிக்கும் நிலைக்கு கொண்டுபோய்விடும் என மிகவும்  வருத்தமாக  தெரிவித்துள்ளார்.