நடிகர் விஜயுடன் காமெடி நடிகர் சதிஷ் காரில் பயணிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நாயகர்கள் வரிசையில் ஒருவராக திகழ்பவர் சதீஷ். பல்வேறு மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டிருந்த இவர், ஜித்தன் ரமேஷ் நடித்த 'ஜெர்ரி' திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார். இதுவரை காமெடியில் மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வந்துள்ளார் சதீஷ். எதிர்நீச்சல், ரெமோ, மிஸ்டர் லோக்கல், வேலைக்காரன், மான்காரத்தே உள்ளிட்ட பல படங்களில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார் சதீஷ். இவர்கள் இருவரின் காமெடிகளுக்கும் வரவேற்பை கிடைப்பதை தொடர்ந்து பல படங்களில் இணைய ஆரம்பித்தனர்.
விஜய்யுடன் கத்தி, பைரவா, தனுஷுடன் 'நய்யாண்டி', விஜய்சேதுபதியுடன் 'றெக்க' சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகிய அண்ணாத்த என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் சதீஷ். சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சதீஷ், முன்னதாக ஹர்பஜன் சிங் காரில் உட்கார்ந்தபடி இது ஒன்றும் மோசமான பயணம் இல்லை என்ற கருத்தோடு புகைப்படத்தை வெளியிட்டார். இதற்கு நடிகர் சதீஷ், பைரவா படத்தின் போது தளபதி விஜய்யுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து இதுதான் என்னுடைய பெஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.
