நாயகன் மீண்டும் வரார்.. டப்பிங் ஸ்டுடியோவிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்.. இந்தியன் 2 - வைரலாகும் வீடியோ!
ஏறத்தாழ 63 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் பல்வேறு துறைகளில் பணியாற்றி, இன்று உலக நாயகனாக வளம் வந்து கொண்டிருக்கிறார் திரு. கமல்ஹாசன். தமிழ் சினிமா என்பதை தாண்டி, இந்திய சினிமாவின் பெருமையாக திகழ்கிறார் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல.

அந்த வகையில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் முறையாக இயக்குனர் சங்கர் அவருடைய இயக்கத்தில் இந்தியன் என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் அவர்கள் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்த இரு வெவ்வேறு கதாபாத்திரங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சுமார் 21 ஆண்டுகள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2. படம் அறிவிக்கப்பட்டது 2017 ஆம் ஆண்டு என்றாலும் இப்படத்திற்கான பணிகள் துவங்கப்பட்டது 2019 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அன்று தொடங்கி இன்று வரை பெருந்தொற்றும் பல மரணங்களும் இந்தியன் 2 திரைப்படம் உருவாகுவதை தொடர்ச்சியாக தடுத்து வந்தது.
இந்த சூழலில் தற்பொழுது இந்தியன் 2 படம் முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள். இது குறித்து ட்விட்டர் தளத்தில் வெளியாகியுள்ள ஒரு வீடியோவில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும், இந்த திரைப்படத்தின் இயக்குனரான சங்கர் அவர்களும், டப்பிங் ஸ்டுடிவோவிற்கு வந்து தங்களுடைய பணியை மேற்கொள்வதை வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர் திரு. விவேக் அவர்கள் முதலும் கடைசியுமாக உலகநாயகன் கமல் அவர்களுடன் நடித்திருப்பது மிக மிக குறிப்பிடத்தக்கது. அவருடைய காட்சிகள் வெட்டப்படாமல் திரைப்படத்தில் இடம் பெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.