நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா வை பிரபல அரசியல் வாரிசு ஒருவர் ஒரு காதலித்து ஏமாற்றியதாக வெளியான தகவல் குறித்து  அது யார் என்ன விவரம் என்பவைகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்  நடிகை ஆண்ட்ரியா இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழ் திரையுலகில் நடிகை ஆண்ட்ரியாவை தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவுக்கு தனது குரல் வளத்தாலும்,   நடிப்பாலும்  இளம் தலைமுறையினர்  மனதில் இடம்பிடித்துள்ளார் ஆண்ட்ரியா .

மிகப்பிரபலமான இவருக்கும் ஒரு அரசியல் வாரிசுக்கும் இடையே  காதல் ஏற்பட்டு அதில் ஆண்ட்ரியாவுடன் அந்த நபர்  உல்லாசமாக இருந்து பின்னர் அவரை அந்த அரசியல்வாரிசு  ஏமாற்றிவிட்டார் எனவும்,  தன்னை ஏமாற்றிய  அந்த நபரை ஆண்ட்ரியா அம்பலப்படுத்தப் போகிறார் எனவும்  தகவல்கள் வேகமாக பரவியது. இந்நிலையில் தனியார்  நிகழ்ச்சிகளில் பாடும் அவர், காதல் தோல்வி  கவிதைகள் மற்றும் காதல் தோல்வி பாடல்களை பாடி வேதனையை வெளிப்படுத்திவருகிறார். எனவும்,  தனது காதல் தோல்வி தொடர்பாகவும்,  அதில் தன்னை  ஏமாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான நபரை பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள ஆண்ட்ரியா அதை வெளியிட்டு அந்த அரசியல் வாரிசை அம்பலப்படுத்தப் போகிறார் எனவும் தகவல்கள் பரபரத்தன.   இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  இது குறித்து மனந்திறந்து பேசியுள்ள ஆண்ட்ரியா,  '' நான் அன்று கலந்து கொண்ட நிகழ்ச்சியில்  பத்திரிக்கையாளர்கள் ஒளிப்பதிவாளர்கள்  கேமரா இல்லாமல் இருந்தார்கள். 

அதனால் தைரியமாக  அவர்கள் மத்தியில் நான் ஒரு கவிதையை வாசித்தேன் ,  அந்த கவிதை குறித்து அவர்கள்  கேட்டதற்கு இது என்னுடைய மோசமான காதல் பற்றியது என கூறினேன் அதுதான் நான் செய்த தவறு...  அது நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்,  பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை பத்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் பேசியதை இப்போது சிலர் திட்டமிட்டு திரித்து  தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர் . என்னை காதலித்தவர் நடிகர் என்கின்றனர்  அவர் ஒரு அரசியல் வாரிசு என்றெல்லாம் கிளப்பி விடுகிறார்கள் .   அதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு கோபம் தான் வருகிறது இத்தனை நாடுகளாக  அதற்கு எப்படி விளக்கம் கொடுப்பது என தெரியாமல் அமைதியாக இருந்துவிட்டேன் என மனம் திறந்து கூறியுள்ளார் ஆண்ட்ரியா.