ultimate star got injured at shooting spot

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தற்போது தயாராகி வரும் புதிய திரைப்படம் விசுவாசம். விவேகம் திரைப்படத்தை தொடர்ந்து, அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம், விசுவாசம்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றுவருகிறது. இதனிடையே விசுவாசம் படப்பிடிப்பின் போது நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், இப்போது வெளியாகியிருக்கிறது.

விசுவாசம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அஜீத்தின் காலில் அடிபட்டுவிட்டதாம். அதனால் அவர் வலியில் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனை பார்த்த படக்குழுவினர் அவரிடம் ஷூட்டிங்கை வேண்டுமானால் இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கின்றனர்.

ஆனால் அஜீத் வேண்டாம் எனக்கூறி மறுத்துவிட்டு, ஷூட்டிங் நல்ல முறையில் நடைபெற வேண்டும். என கூறி வலியுடன் நடித்தாராம். இதனை பார்த்து படக்குழுவினர் அஜீத்தின் பொறுப்புணர்வை நினைத்து வியந்திருக்கின்றனர்.

விசுவாசம் திரைப்படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும். என்ற எண்ணத்துடன் வேகமாக தயாரித்து வருகிறது விசுவாசம் படக்குழு.