எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய, 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் நடிப்பதற்காக, படக்குழு முழுவதும் ஜப்பான் தலைநகரான டோக்கியோவிற்கு சென்றது. ஒரு நாள் ஷூட்டிங் மாலையே முடிந்துவிட்டது.

உடனே நாகேஷ், "இதற்க்கு மேல் ஷூட்டிங் இல்லையா? என எம்.ஜி.ஆரிடம் கேட்க, அதற்கு எம்.ஜி.ஆறும், முடிந்து விட்டது. எல்லோரும் போய் ஓய்வெடுங்கள். நாளை காலை தான் ஷூட்டிங் உள்ளது என கூறியுள்ளார். 

இதனால் மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய அறைக்கு சென்ற நாகேஷ் ஜில் என ஒரு குளியலை போட்டு விட்டு, உயர் தர மதுவை ஜப்பான் அழகை பார்த்து கொண்டே அருந்தியுள்ளார். 

சரியாக இரவு 10 மணிக்கு நாகேஷ் இருந்த அறையின் காரிங் பெல் அடித்துள்ளது. மெல்லமாக எழுந்து வந்து கதவை திறந்துள்ளார் நாகேஷ். வெளியில் நின்றிந்ததோ எம்.ஜி.ஆர். "நாகேஷ் உடனே புறப்படுங்கள், சில ஷாட்டுகள் எடுக்க வேண்டி உள்ளது என சொல்லியிருக்கிறார்.

நாகேஷுகோ போதை தலை சுற்றியிருக்கிறது. வேறு யாரையாவது அனுப்பினால் நாகேஷ் பல காரணங்களை சொல்லி நழுவி விடுவார் என்று எண்ணி, எம்.ஜி.ஆரே நேரில் வந்து நாகேஷை அழைத்துள்ளார். இதனால் மறுக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற நாகேஷ் உடனடியாக பாத்ரூம் சென்று மீண்டும் நன்றாக குளித்து விட்டு, போதை இறங்க பானம் குடித்து விட்டு... வாசனை திரவியங்களை போட்டு கொண்டு சென்றாராம். 

மேலும் இது போல் பிரச்சனை ஏற்படவே கூடாது என "உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படம் முடியும் வரை, மது அருந்தாமலேயே இருந்திடலாம் என அதிரடி முடிவை எடுத்தாராம் நாகேஷ்.