இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை பூஜா குமார் கமிட்டாகியுள்ளார். இவர் ஏற்கெனவே, உலக நாயகன் கமல்ஹாசனின், ‘விஸ்வரூபம்’, விஸ்வரூபம் 2, உத்தமவில்லன்’ போன்ற படங்களில் நடித்தவர் . ‘கபடதாரி’ படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றுக்காக பல நடிகைகள் பரிசீலனையில் இருந்த நிலையில் பூஜாகுமார் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று தான் கருதியதாகவும், இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள பூஜாகுமாரை தொடர்பு கொண்டு கதை மற்றும் அவருடைய கேரக்டர் குறித்து தெரிவித்தவுடன் அவர் முழு சந்தோஷத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிக்க போராடிவரும் வாரிசு நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். சத்யா படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரங்கா, மாயோன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த படம் ’காவுல்தாரி’ என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்காகும். தமிழில் ‘கபடதாரி’ என்ற டைட்டில் வைக்கப்படுள்ள இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை பூஜா குமார் கமிட்டாகியுள்ளார். இவர் ஏற்கெனவே, உலக நாயகன் கமல்ஹாசனின், ‘விஸ்வரூபம்’, விஸ்வரூபம் 2, உத்தமவில்லன்’ போன்ற படங்களில் நடித்தவர் . ‘கபடதாரி’ படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றுக்காக பல நடிகைகள் பரிசீலனையில் இருந்த நிலையில் பூஜாகுமார் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று தான் கருதியதாகவும், இதனையடுத்து அமெரிக்காவில் உள்ள பூஜாகுமாரை தொடர்பு கொண்டு கதை மற்றும் அவருடைய கேரக்டர் குறித்து தெரிவித்தவுடன் அவர் முழு சந்தோஷத்துடன் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
விரைவில் அவர் அமெரிக்காவில் இருந்து படப்பிடிப்புக்காக சென்னை வரவுள்ளார். கேயாஸ் தியரி அடிப்படையில் திரில்லர் படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு மறைந்த இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் திரைக்கதை, வசனம் எழுதுகிறார். சைமன்கிங் இசையில், ராசாமதி ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் கபடதாரி படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் ஷுட்டிங் நவம்பர் 1ம் தேதி தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படியே, கபடதாரி படத்தின் ஷுட்டிங் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 1, 2019, 6:49 PM IST