சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் இதுவரை ஏற்று நடிக்காத கிராமத்து வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கண்ணே கலைமானே', இந்த படத்தில் நடிகை தமன்னா உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். சீராமசாமியின் படம் என்பதை எடுத்துக்கூறும் வகையில், கிராமத்து கதை, அதில் ஒரு அழகான காதல், ஆழமான கணவன் மனைவி செண்டிமெண்ட், அம்மாவின் பாசம், உறவுகளின் கூட்டணி, கொஞ்சம் சண்டை என அமைத்திருக்கிறது. எனினும் உதயநிதி இதுவரை ஏற்று நடித்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளதால், இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.