udhayanithi stalin enter in political

நடிகர்களின் அரசியல்

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் தமிழ் திரையுலகின் இரண்டு ஜாம்பாவன்களான ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம்தான். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலுக்கு வருவண வருவேன் என்று சொல்லி கொண்டிருந்த ரஜினி ஒரு வழியாக அரசியலுக்கு வந்து விட்டார். அதற்கான அறிவிப்பை கடந்த டிசம்பர்31 ம் தேதி அறிவித்தார். கமலும் தமது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தெரிவியஹது வருகிறார். மேலும் மாவட்ட வாரியாக தமது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.



அரசியல் ஆளுமைகள்

தமிழக அரசியலை ஆட்டி படைத்து கொண்டிருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இவர் தற்போது உயிருடன் இல்லை. மற்றொருவர் திமுக தலைவர் கருணாநிதி. இவரோ வயது மூப்பின் காரணமாக உடல்நலம் குன்றி சரிவர அரசியல் பணிகளில் ஈடுபட முடியாதவராக இருக்கிறார்.

அரசியல் வாரிசு உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் திமுகவிலிருந்து ஒரு வாரிசு அரசியலில் இறங்க போவதாக அறிவித்துள்ளார். அவர் வேறு யாருமல்ல திமுக செயல்தலைவர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் தான். தனது தாத்தா அரசியல் ஜாம்பவானாகவும் தனது தந்தை அரசியல் தீவிரமாக இறங்கி செயல்பட்டு கொண்டிருந்தாலும், இத்தனை நாள் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார் உதயநிதி ஸ்டாலின். 



நேரம் நெருங்கிவிட்டது

மேலும் நடிகர்கள் பலர் அரசியலுக்கு வருவதாக அறிவித்து வருகின்றனர். எனவே தானும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டதாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவேன்

இந்நிலையில் ஆலந்தூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியின் கலந்துக்கொண்டு, உதயநிதி ஸ்டாலின் தொண்டர்களின் முன் உரையாற்றினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் பிறந்ததிலிருந்து அரசியலில் இருப்பதாகவும், திமுக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். 



ஆளாளுக்கு அரசியலுக்கு வருகிறார்கள். இவர் பிறப்பிலேயே அரசியல் வாரிசு என்பதால், அரசியலில் ஜெயிப்பாரா, மாட்டாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.