சவாலாக இருந்த நடிகையை சமாளிக்க முடியாமல் திணறிய உதயநிதி!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 12, Feb 2019, 5:57 PM IST
udhayanithi get big challenge for to act thamanna
Highlights

உதயநிதி ஸ்டாலின், மற்றும் நடிகை தமன்னா இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் படம் 'கண்ணே கலைமானே'.
 

உதயநிதி ஸ்டாலின், மற்றும் நடிகை தமன்னா இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள திரைப்படம் படம் 'கண்ணே கலைமானே'.

இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கும்,  இந்தப் படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருக்கிறார்.  உதயநிதி இதுவரை நடித்திராத புதிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து உதயநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்... " இயக்குனர் சீனு ராமசாமி ஆரம்பத்தில் எனக்கு வேறு ஒரு கதையை கூறினார்.  அதில் என் கதாபாத்திரம் மிகவும் கட்டுமஸ்தான உடல் அமைப்பு கொண்டதாக இருக்கும். ஆனால் அந்த தோற்றத்தை கொண்டுவர,  நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். 

சீக்கிரமே படத்தை தொடங்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால், உடனடியாக எனக்கு "கண்ணே கலைமானே" படத்தின் கதையை கூறினார்.  இந்த படம் எனக்கு ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இந்த படத்தில் நடித்த போது,  நடிகை தமன்னாவுடன் இணைந்து பணியாற்றியது,  மிகவும் சவாலாக இருந்தது.  படத்தில் நிறைய உணர்ச்சிகரமான காட்சிகள் இருக்கிறது.  அந்த காட்சிகளில் தமன்னா மிக எளிதாக நடித்தார்.  அவர் சினிமாவில் நடிப்பதை பார்த்து வியப்படைந்தேன்.

இதில் நான் வேளாண்மையை நம்புகிற விவசாயி என்றாலும் இது விவசாய பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படம் அல்ல.  நல்ல மனது உள்ள நேர்மையான வாழ்க்கை வாழும்,  இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது என்ன நடக்கிறது? என்பதை பற்றிய படம்.  மனித உறவுகளை பற்றி பற்றிய கதை. எனவே உணர்ச்சி பூர்வமான இந்த கதையில் நடிக்க சற்று திணறியதாக கூறியுள்ளார். 

loader