ராதே ஷ்யாம் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை ரெட் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது..

யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பொங்கல் விருந்தாக அடுத்தாண்டு ஜனவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கபட்டு பின்னர் கொரோனா பரவலால் பட ரிலீஸ் தள்ளிப்போனது..

இதை தொடர்ந்து ராதே ஷ்யாம் வருகிற மார்ச் 11-ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிவுள்ள இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. கிட்டத்தட்ட 400 தியேட்டர்களில் ராதே ஷ்யாம் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதன் Aashiqui Aa Gayi,என்னும் பாடலின் ஸ்னீக் பிக் சமீபத்தில் வெளியானது. இதில் பிரபாஸ், பூஜா ஹெக்டேவின் ரொமான்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.