Udhayanidhi Stalins ippadai vellum First Look Poster Released
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இப்படை வெல்லும் திரைப்படம் முழுக்க முழுக்க மைண்ட் கேமை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
“இப்படை வெல்லும்” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தூங்கா நகரம், சிகரம் தொடு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் கௌரவ் இப்படை வெல்லும் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் உதயநிதி வித்தியாசமான கெட்டப்பில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்துள்ளார் என்றும் தனது கூர்மையான புத்தியால் கஷ்டமான காரியங்களை செய்பவர் என்றும் இயக்குநர் கௌரவ் கூறியுள்ளார். அதாவது படம் முழுக்க முழுக்க மைண்ட் கேம் என்றும் கூறியிருக்கிறார்.
ஹீரோயினாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். அவரும் படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
