Nenjuku needhi review : அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தன்யா, ஆரி அர்ஜுனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் விமர்சனம்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் கனா. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், முதல் படத்திலேயே இயக்குனராக முத்திரை பதித்தார். இதையடுத்து அவர் 2-வதாக இயக்கி உள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார்.

போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள இப்படம் குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை டுவிட்டர் வாயிலாக பதிவிட்டு வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

இப்படத்தின் சிறப்பு காட்சியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாமன்னன் படக்குழுவுடன் பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ், அதன் விமர்சனத்தை இன்று தெரிவித்துள்ளார். அதன்படி நெஞ்சுக்கு நீதி சிறந்த படம் என தெரிவித்துள்ள அவர், உதயநிதியின் நடிப்பும், தோற்றமும் அருமையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். படக்குழுவினருக்கும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது: நெஞ்சுக்கு நீதி படம் சூப்பராக உள்ளதாகவும், உதயநிதி திறம்பட நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பின்னணி இசை சிறப்பாக உள்ளதாக பாராட்டியுள்ள அவர், கதாபாத்திர தேர்வும் கச்சிதமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அருண்ராஜாவின் இயக்கம் அருமை என குறிப்பிட்டு இப்படத்திற்கு 4 ஸ்டார்களை கொடுத்துள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளதாவது : நெஞ்சுக்கு நீதி சிறந்த ரீமேக் படம். திரைக்கதையும் வசனமும் அருமையாக உள்ளதாகவும், உதயநிதி, ஆரியின் நடிப்பு சூப்பர் என பாராட்டி உள்ளார். கனாவை போல் இதுவும் அருண்ராஜாவுக்கு சிறந்த படமாக அமைந்துள்ளது. நம் சமூகத்துக்கு தேவையான படம் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நெஞ்சுக்கு நீதி படத்தில் நிறைய அம்சங்கள் கவரும்படி உள்ளன. தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக நெஞ்சுக்கு நீதி உள்ளது. ஆர்டிகிள் 15 படத்தை நேர்த்தியாக ரீமேக் செய்துள்ளார். உதயநிதியின் நடிப்பு சூப்பர், இதற்கு முன் இப்படி பார்த்ததில்லை என பாராட்டி உள்ளார்.

Scroll to load tweet…

இதன்மூலம் நெஞ்சுக்கு நீதி படம் சிறப்பான ரீமேக் படமாக அமைந்துள்ளதாக பெரும்பாலான விமர்சனங்கள் வருவதனால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... SK 21 : கமல் - சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் தலைப்பை லீக் செய்த உதயநிதி... ஷாக் ஆன ‘எஸ்.கே.21’ படக்குழு