Asianet News TamilAsianet News Tamil

Kalaga thalaivan : ‘கலகத் தலைவன்’ ஆனார் உதயநிதி ஸ்டாலின்... மோஷன் போஸ்டருடன் வெளியான புதிய அறிவிப்பு

Kalaga thalaivan : மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக்பாஸ் ஆரவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்திற்கு ‘கலகத் தலைவன்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

Udhayanidhi Stalin next movie titled as Kalaga thalaivan Director Magizh Thirumeni Nidhi Agerwal Arav
Author
Tamil Nadu, First Published Jul 26, 2022, 7:35 AM IST

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் ராஜா காமராஜ் இயக்கியிருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் படத்தில் பிசியாக நடித்து வந்தார் உதயநிதி.

இந்நிலையில், அவர் நடிப்பில் தயாராகி உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை மீகாமீன், தடையறத்தாக்க, தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் இப்படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... சூர்யா விருது வெல்வார் என ஜோசியர் சொன்னபோது நம்பவே இல்லை.. சிவகுமாரின் சுவாரஸ்ய பேட்டி..

                                                                         

இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கரோலி ஆகியோர் இசையமைத்து உள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் படத்தின் தலைப்பையும் அறிவித்தனர். அதன்படி இப்படத்திற்கு கலகத் தலைவன் என பெயரிட்டுள்ளதாக அந்த மோஷன் போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி உதயநிதியின் தோற்றமும் அதில் இடம்பெற்று உள்ளது. இதைப்பார்க்கும் போது இப்படமும் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்... நிர்வாண போஸ் கொடுத்த ரன்வீர் சிங்...வழக்கு பதிவு செய்த போலீசார்!

Follow Us:
Download App:
  • android
  • ios