Udhayanidhi Stalin has such a desire!
தற்போது சினிமாவில் பிசியாக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.
இயக்குனர் எழில் இயக்கத்தில் சரவணன் இருக்க பயம் ஏன் என்ற படம், இவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது.
சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் உதயநிதி இந்த படத்தில் தனது கேரக்டர், சூரியின் கேரக்டர், என சில ஹின்ட்ஸ் கொடுத்தார்.
பிறகு, நயன்தாரா, ஹன்சிகாவுடன் நடத்த அனுபவத்தையும் சொன்னார்.
அப்போது, தனது குடும்த்தைப் பற்றிச் சொன்ன அவர், தனக்கிருக்கும் ஆதங்கத்தையும், ஆசையையும் போட்டுடைத்தார்.
அது, தாத்தாவின் (அதாவது மு,கருணாநிதி) அவர்களின் படங்கள், வசனத்தில் நடிக்கும் . வாய்ப்பு எனக்கே கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தையும், தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை, ஒரு ஆவணப் படமாக எடுத்து அதனை அவரது பெருமை, சாதனையை அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்று ஆசையையும் சொன்னார்.
