Two party searching for a hero
தமிழ் சினிமாவின் இரண்டு பவர்ஃபுல் பதவிகளையும் கைப்பற்றிய முஷ்டி நடிகர் அடுத்து அரசியலில் இறங்கப்போவது உறுதியாகி விட்டது. அதைத் தொடர்ந்து நடிகரை நோக்கி வலைகள் வீசப்படுகின்றன.
முதலில் மத்திய ஆளுங்கட்சி வலை வீசியிருக்கிறது. மாநில அளவில் பதவி தருகிறேன் என்று ஆசை காட்டுகிறார்கள்.
கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற கவர்ச்சியான தலைமை தேவை என்பதால் இந்த வலைவீச்சு.
மாநில ஆளுங்கட்சியும் தம்பியை வளைக்கப் பார்க்கிறதாம். இரண்டு பக்கமும் சிரித்து வைத்துக்கொண்டே சமாளித்து வருகிறார்.
ஆனால் தம்பியின் மனதில் தனிக்கட்சி எண்ணம் தான் இருப்பதாக தெரிகிறது. கப்பல் தலைவருடனும் இவருக்கு நெருக்கம் என்பதால் அந்த பக்கம் போகாமல் இருப்பதற்கான வழிகளை மட்டும் பார்க்கிறதாம் எதிர்க்கட்சி தலைமை.
அப்ப சங்கங்களோட கதி?
