தற்போது மீட்கப்பட்ட இருவரும் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அறை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்த இரண்டு மாடல் அழகிகளை போலீசார் மீட்டனர்.
இதையும் படிங்க: தோழி யாஷிகாவையே ஓரங்கட்டிய ஐஸ்வர்யா தத்தா... புதுவித புசு புசு உடையில் கண்கூச வைக்கும் உச்சகட்ட கவர்ச்சி...!
அதே அறையில் அவர்களுடன் இருந்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த சரவணன், திருமுல்லைவாயிலைச் சேர்ந்த செந்தில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் படம் ஒன்றில் நடிக்க வைக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி, டெல்லியைச் சேர்ந்த மாடல் அழகிகள் இருவரையும் சென்னை அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் அவர்களை நட்சத்திர ஓட்டலில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
தற்போது மீட்கப்பட்ட இருவரும் பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் வருவதற்கு முன்பே ஓட்டலில் இருந்து தப்பியோடிய டெல்லியைச் சேர்ந்த சூரஜ் மல்ஹோத்ரா, ராகுல் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணன், செந்தில் மீது பெண்களை பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 11, 2021, 5:27 PM IST