தேர்தல் நேரங்களில், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது, புதிதாக கட்சியில் இணைவது போன்ற நிறைய நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று தான்.

இந்நிலையில் தேர்தல் நெருங்குவதால், கடந்த சில தினங்களாக ஒருசில நடிகர்கள் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில்,  காமெடி நடிகர்களான விஜய்கணேஷ் மற்றும் சுப்புராஜ் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து, அதிமுக கட்சியில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இவர்கள் இருவரும் வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வாக்காளருக்காக வாக்கு சேகரிக்கவும், பிரச்சாரத்திலும் ஈடு பட உள்ளதாக கூறியுள்ளனர்.