Asianet News TamilAsianet News Tamil

Maaran movie update : மாறன் படத்தின் மரண மாஸ் அப்டேட் வந்தாச்சு.... தனுஷ் ரசிகர்கள் ஹாப்பியோ ஹாப்பி

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக மாறன் (Maaran) படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. 

twitter release special emoji for dhanush maaran movie
Author
Tamil Nadu, First Published Feb 28, 2022, 8:00 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் (Dhanush). இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் மாறன். துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்துள்ளார். பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அவர் நடிக்கும் மூன்றாவது தமிழ்படம் இதுவாகும்.

twitter release special emoji for dhanush maaran movie

மேலும் இப்படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக மாறன் (Maaran) படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளது. இதற்கான பணிகளும் தற்போது வேகமெடுத்து வருகின்றன.

twitter release special emoji for dhanush maaran movie

இந்நிலையில், தனுஷின் மாறன் படத்துக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதன்படி மாறன் படத்துக்காக டுவிட்டரில் பிரத்யேகமாக எமோஜி வெளியிடப்பட்டு உள்ளது. தனுஷ் படத்துக்கு டுவிட்டரில் எமோஜி வெளியிடுவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்துக்கும், இவ்வாறு எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்.... அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.... மீண்டும் பிக்பாஸில் பிந்து மாதவி - ஆனா அதுல ஒரு டுவிஸ்ட் இருக்கு?

Follow Us:
Download App:
  • android
  • ios