twitter advice from elder actor for a famous Tamil actor

பிரபல நடிகர் சிம்பு தொடர் சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் பிறகு இப்போது மணிரத்தினத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவரது வீடியோ ஒன்று தற்போடு இணையத்தில் சிம்புவிற்கு நற்பெயரை பெற்று தந்திருக்கிறது. இறந்து போன தனது ரசிகர் ஒருவரின் 9ம் நாள் நினைவு அஞ்சலி போஸ்டரை , சிம்பு தனது கையாலேயே ஒட்டியிருக்கிறார்.

பொதுவாகவே சிம்புவிற்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான பாசமானது அனைவரும் அறிந்ததே. சிம்புவின் எந்த கடினமான சூழலிலும், அவரது ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுத்ததே இல்லை. அதே போல தான் சிம்புவும். சிம்பு தனது ரசிகருக்காக உருக்கமாக போஸ்டர் ஒட்டும் இந்த காட்சியை பார்த்த நடிகர் விவேக், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருக்கிறார்.

தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது pic.twitter.com/DtRAjFccF0

— Vivekh actor (@Actor_Vivek) May 19, 2018

அந்த ட்வீட்டில் ”தனது ரசிகருக்காக போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு ,காலம் தவறாமை இவற்றை பழகினால் மீண்டும் சிம்பு உயர்வை அடைவார். அவர் இடம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது” என தெரிவித்திருக்கிறார் விவேக்.