Asianet News TamilAsianet News Tamil

அறிகுறியே இல்லையாம்... குடும்பத்தோடு கொரோனா வார்டில் அட்மிட் ஆன இளம் நடிகை...!

இதையடுத்து குடும்பத்தினர் 5 பேரும் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். 

TV Actress Mohena Kumari Singh Whole Family Test Corona Positive Without any Symptoms
Author
Chennai, First Published Jun 4, 2020, 6:22 PM IST

பாலிவுட்டில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் நடித்தவர் மோகனா குமாரி சிங். அதன் பின்னர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், ஃபியார் ஃபைல்ஸ், சில்சிலா பியார் கா, பியார் துனே க்யா கியா உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக ஆரம்பத்தில் அனைத்து விதமான படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

TV Actress Mohena Kumari Singh Whole Family Test Corona Positive Without any Symptoms

இதையும் படிங்க: நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம்... நெருங்கிய நண்பர் வெளியிட்ட தகவல்... குஷியில் ரசிகர்கள்...!

தற்போது ஷூட்டிங் எதுவும் இல்லாததால் மோகனா குமாரி சிங், டேராடூனில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகனாவின் மாமியாருக்கு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் நடிகை மோகனா குமாரி சிங் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

TV Actress Mohena Kumari Singh Whole Family Test Corona Positive Without any Symptoms

இதையும் படிங்க:  “போன மாச கரண்ட் பில்லை கட்டிட்டு பேசுப்பா”...நடிகர் பிரசன்னாவிற்கு மின்வாரியம் கண்டனம்...!

இதையடுத்து குடும்பத்தினர் 5 பேரும் ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தெரிவித்துள்ள மோகனா குமாரி  சிங், நாங்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் இருந்தோம். ஆனால் எங்கள் மைத்துனரை தவிர அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது எனக்கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios