சென்னை மயிலாப்பூரை சேர்ந்த நடிகர் மதன் சொகுசு பேருந்தின் மூலம் திருவனந்தபுரத்திற்கு சென்ற போது அவர் சென்ற பேருந்து தலைகுப்பிற கவிழ்த்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், முதல் உடல் நசுங்கி உயிர் இழந்தார். 

நேற்றிரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து, மேலூர் அடுத்த வஞ்சிநகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தலைக்குப்பிற கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணித்த சென்னை மயிலாப்பூரை சேர்ந்த தொலைக்காட்சி சீரியல் துணை நடிகர் மதன்ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர்.

சிலர் உயிருக்கு ஆபத்து நிலையில் உள்ளதாகவும், தற்போதைக்கு டிவி.நடிகர் மதன் மட்டுமே உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.