Tulkar Salman has four characters in the film Solo ...
நடிகர் துல்கர் சல்மான் தமிழில் ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ காதல் கண்மணி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்தப் படங்களை அடுத்து துல்கர் சல்மான், தற்போது ‘சோலோ’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தப் படத்தை விக்ரம், ஜீவாவை வைத்து ‘டேவிட்’ என்ற படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கி வருகிறார்.
இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் துல்கர் சல்மான் நான்கு வெவ்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதனால் படத்தில் நான்கு விதமான கதைகள் இடம் பெறுவது போல் திரைக்கதையை உருவாக்கியிருக்கி இருக்கிறார்களாம்.
இந்தப் படத்தில் நேஹா சர்மா, ஸ்ருதிஹரிகரன், தன்ஷிகா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.
படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார். இந்தப்படத்தின் ஆடியோ ரைட்ஸை ‘டிரெண்ட் மியூசிக்’ நிறுவனம் வாங்கியிருக்கிறது.
எல்லாம் சரி ஹீரோ நான்கு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால், டெட்டில் ஏன் “சோலோ” என்று வைத்தார்கள்? விடை தெரியாத கேள்விக்கு பதில் படத்தில்.
