வலியால் துடித்த வாசன்... அரசு மருத்துவமனையில் அனுமதி! டிடிஎப்-ஐ பார்க்க குவிந்த சின்னஞ்சிறு வாண்டுகள்

புழல் சிறை ஜெயிலரிடம் தனக்கு வலி இருப்பதாக வாசன் தெரிவித்ததால் அவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

TTF vasan admitted in stanley government hospital gan

டிடிஎப் வாசன், நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது தனது  இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து விபத்துகுள்ளானதையடுத்து அவரை மீட்ட அவரது நண்பர்கள்"மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து வாசனுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என பரிந்துரை செய்த நிலையில் டிடிஎப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை புழல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற வாசன் தனக்கு கையிலும் இடுப்பிலும் வலி ஏற்பட்டதாக புழல் சிறை ஜெயிலரிடம் தெரிவித்ததால் அவருக்கு மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... நான் வீலிங் பண்ணல.. இதனால் தான் விபத்தில் சிக்கினேன் - புது விளக்கம் தந்த TTF.. எப்புட்ரா என நெட்டிசன்கள் ஷாக்

இங்கு வாசனுக்கு கையில் கட்டு போட்ட நிலையில் முழு உடலையும் பரிசோதனை செய்து வருகின்றனர். டிடிஎப் வாசனை பார்க்க அவரது ரசிகர்கள் எனப்படும் சின்னஞ்சிறு வாண்டுகள் ஸ்டான்லி வந்துள்ளனர். முழு பரிசோதனையும் நடந்து முடிந்த பிறகு வாசன் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என தெரியவந்துள்ளது.

டிடிஎப் வாசன் தொடர்ந்து அதிவேகமாக பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கி வருவதால் அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிடிஎப் வாசனை வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... யூடியூபர் வாசனுக்கு சிறை தண்டனை விதிப்பு... டிடிஎப் மீது அடுத்தகட்ட ஆக்‌ஷனுக்கு தயாரான போலீஸ்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios