பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், டாப்சி, சுஜாய் கோஷ் நடிப்பில் கடந்த மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் 'பாட்லா'. 

இந்த படம், ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த படத்தின் கதை என்னவெனில்...  கணவர், குழந்தை குடும்பம் என வாழ்ந்துகொண்டிருக்கும் நடிகை டாப்சிக்கு ஒரு கள்ளக்காதல் வருகிறது.

ஒருநாள் திடீரென கள்ளக்காதலன் மரணம் அடைய, போலீஸ் டாப்சியை கைது செய்கின்றனர் . பின் என்ன நடக்கிறது என்பதை விறுவிறுப்பாக கூறி இருப்பார்  இயக்குனர்.

இதில் பிங்க் படத்தை போலவே நடிகர் அபிதா பச்சன்  வழக்கறிஞர் கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில், இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டாப்சி கேரக்டரில் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதேபோல் அமிதாப் கேரக்டரில் ஒரு முன்னணி நடிகர் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது