ஜோடி படத்திற்கு த்ரிஷா வாங்கிய சம்பளம் இதுவா? தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க!
'ஜோடி' படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
'ஜோடி' படத்தில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, சூர்யா நடித்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
2002 ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது முதல், கிட்டத்தட்ட இவர் கதாநாயகியாக மாறி 16 வருடங்கள் கழிந்த பின்பும், தொடர்ந்து கதாநாயகியாக, மட்டுமே ஏற்று நடித்து வருகிறார்.
மேலும், சமீப காலமாக முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பதை தவிர்த்து, கதைக்கும் கதாபாத்திரத்துக்கும், வலுசேர்க்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த 'நாயகி', 'மோகினி' ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.
எனினும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழில் இவர் நடித்த 96 திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. தற்போது இந்த படத்தை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திரையுலகில் இவர் அறிமுகமான ஜோடி படத்தில் இவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது. பிரசாத் மற்றும் சிம்ரன் நடித்த இந்த படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு சிறு ரோலில் நடித்திருப்பார் த்ரிஷா. அதாவது அவர் அப்போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினாராம். ஆனால் இன்றோ பல லட்சம் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.
சிம்ரனுடன் முதல் படத்தில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்கு பின், பேட்ட படத்தில் மீண்டும் இணைந்து நடித்தார். அதை தொடர்ந்து தற்போது, மற்றொரு படத்திலும், சிம்ரன் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்து வருகின்றனர்.