நடிகை நடிக்கும் "தி ரோட்" திரைப்படத்தின் புதிய மேக்கிங் டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. 

நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 'தி ரோட்' திரைப்படம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. நடிகை த்ரிஷாவின் திரைப்பயணத்தில் 'தி ரோட்' திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாகி உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீசுக்கு பிறகு, த்ரிஷா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று, 'தி ரோட்'. 

AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதையின் நாயகியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில், "சார்ப்பட்டா" புகழ் டான்சிங் ரோஸ் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம்.C.S இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வேட்டைக்கு தயாரான 'ஜெயிலர்'..! ரிலீஸ் தேதியோடு... அனைத்து நடிகர்களும் இடம்பெற்ற மாஸ் டீசர் வெளியானது!

மதுரையில் நடந்த சில உண்மை சம்பவத்தை அடிப்படியாக வைத்தே இப்படம் உருவாகியுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். எனவே இப்படத்திற்காக நடிகை த்ரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவரும் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைகள், காடுகள் என மிக கடுமையான இடங்களுக்கு சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றாய் படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி காலமானார்!

விரைவில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை திரை பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.The Road - Exclusive Making Teaser | Trisha | Dancing Rose Shabeer | Arun Vaseegaran | SAM CS