நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் தேதியை சற்று முன்னர் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடைசியாக வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து.. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார். அதேபோல், இப்படத்தில் தமன்னா, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரிப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நெல்சன் திலீப் குமாரின் ஆஸ்த்தான இசையமைப்பாளரான அனிருத் இசையமைத்துள்ளார்.
பிரபல மிருதங்க வித்வான் காரைக்குடி மணி காலமானார்!

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே இப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என பட குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், திடீரென ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து சற்று முன்னர், 'ஜெயிலர்' ரிலீஸ் தேதியோடு, மாஸான டீசர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆகஸ்ட் 10ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளதோடு, இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும், இடம்பெற்றுள்ள ஒரு டீசரையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக ரஜினி செம்ம ஸ்டைலிஷாக காரில் இருந்து இறங்கும் காட்சி புல்லரிக்கும் விதத்தில் உள்ளது. இந்த டீசர் வெளியாகி சில நிமிடங்களே ஆகும் நிலையில், இதனை தலைவர் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தெறிக்க விடும் அளவிற்கு வைரலாக்கி வருகிறார்கள்.
