சாதிவெறியை ஆதரிக்கிறாரா அஜித்..? உண்மை என்ன? என தலைப்பில் பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளதற்கு அஜித்துக்கும், இந்தப்படத்திற்கு சம்பந்தம் இல்லை என விளக்கமளித்துள்ளார் திரெளபதி படத்தின் இயக்குநர் மோகன். 
 
இதுகுறித்து அவர், ‘’எங்கள் படத்திற்கும் தல அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. நான் அவர் ரசிகன், கதாநாயகன் அவர் உறவு என்பதால் மட்டுமே தல பெயரை பிரபல வார இதழ் விளம்பரத்திற்காக பயன்படுத்துவது தவறான செயல். இந்த படம் என் எழுத்து என் உரிமை. இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. வாழுங்கள், வாழ விடுங்கள்’’எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்து திரெளபதி படக்குழுவை சேர்ந்த ஒடுவர், ‘அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இன்றைய தலைமுறை தொடங்கி போன தலைமுறை வரை அனைவராலும் தல என்று அன்போடு அழைக்கும் அஜீத் அவர்களை பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் ஜாதி மதங்களை கடந்தவர் என்று..அப்படிப்பட்ட நிலையில் குமுதம் வார இதழ் இப்படியொரு தலைப்பில் தற்போது வெளியிட்டு இருக்கும் செய்தி துளியளவும் உண்மை இல்லை என்பதை சொல்ல கடமைபட்டுள்ளேன். நடிகர் ரிச்சரட் என்பவர் அஜீத் சாரின் உறவினர் மற்றும் அவர் ஒரு நடிகர் என்பதை தாண்டி எந்தளவிலும் திரெளபதி பட கதை விஷயத்தில் தலையிட்டது இல்லை.

ஒரு நல்ல நடிகர் என்பவர் இயக்குநர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை செவ்வண நடித்து கொடுப்பவர் தான்..அதைத்தான் ரிச்சர்ட் அவர்களும் இதில் செய்து கொடுத்துள்ளார். மேலும் ரிச்சரட் அவர்கள் கதா நாயகனாக இப்படத்தில் நடிக்கவில்லை. முழுக்க முழுக்க கதையின் நாயகனாகவே நடித்துள்ளார். இது ஓரு பெண்கள் குறித்தான சமுக அக்கறையான படம் அவ்வளவே. 

 

நடிகர் ரிச்சர்ட் அவர்கள் திரெளபதி படத்திற்கு முன்பு பத்திற்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். அவரது திரைப்பயணத்தில் எந்த இடத்திலும் அஜீத் சாரின் பெயரை அவர் பயன்படுத்தியது இல்லை. ஆனால் இந்த படத்தில் இப்படியொரு தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்றால் அதன்பின் இருக்கும் சூழ்ச்சியை ரசிகர்கள் நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். அஜீத் சாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கைக்கு எங்களது கண்டனங்கள். திரெளபதி படக்குழுவில் ஒருவனாக இந்த பதிவை பதிவு செய்கிறேன்’’என ஜே.எஸ்.கே.கோபி என்பவர் கேட்டுக் கொண்டுள்ளார்.