நடிகர் சிம்பு  நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்  வெளிவந்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று மிக பெரிய வெற்றிபெற்றது. இந்த படத்தை  தொடர்ந்து சிம்பு நடித்த ' AAA ' படம்  பெரிதும் எதிர்பார்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் படுதோல்வி அடைந்தது. தற்போது சிம்பு ஒரு சில படங்களில் கமிட் ஆகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் 33 வயதை கடந்து விட்டதால், இவருடைய வீட்டில் தீவிரமாக பெண் பார்க்கும் படலமும் நடந்து வருகிறது. சமீபத்தில் சிம்புவின் திருமணம் சீக்கிரம் கைகூட வேண்டும் என யாகம் நடத்திய அவருடைய தந்தை டி.ஆர், இன்று திருப்பதி  ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சிம்புவிற்கு திருமணம் நடைபெற வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

சுவாமி தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  என் மகன் சிம்புக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டி திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தேன். அவருக்கு பிடித்த பெண்ணை அவரே தேர்வு செய்வார், அவருடைய விருப்பம் போல் தான் திருமணம் நடக்கும் என  கூறினார்.

ஏற்கனவே சிம்பு நயன்தாரா, மற்றும் ஹன்சிகாவை காதலித்த போது... அதற்கு சிம்புவின் குடும்பம் ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.