கொரோனா பிரச்சனையால் திரையுலகம் மொத்தமாக முடங்கியுள்ளது. தமிழகத்தில் சீரியல் மற்றும் டி.வி.நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சினிமா படப்பிடிப்புகளுக்கான அனுமதி எப்போது கிடைக்கும் என தெரியவில்லை. ஆனால் சினிமா தொடர்பான போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை மட்டும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. 

 

இதையும் படிங்க: நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?.... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அழகில் மெருகேறிய போட்டோஸ்...!

கடனை வாங்கி படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் பலரும் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். அதனால் டாப் ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள், டெக்னீஷியன்கள் முதல் அனைவரும் தங்களது சம்பளத்தை சற்று குறைத்துக்கொண்டால் தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும் என கோலிவுட்டில் நீண்ட நாட்களாகவே கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். இதை ஏற்றுக்கொண்டு சிலர் மட்டுமே தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர். அதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் யாரும் சம்பள குறைப்பு குறித்து வாய் திறந்ததாக தெரியவில்லை. 

இதனிடையே தங்களது சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள மலையாள நடிகர்கள் முன்வந்தனர். கொரோனா பேரிடரில் இருந்து மலையாள சினிமாவை மீட்க முடிவெடுத்த நடிகர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை குறைத்துக்கொள்ள முடிவெடுத்தனர். இதுதொடர்பாக அண்மையில் கொச்சியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய மலையாள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு அதன் முடிவில் ஊதியம் குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. 

 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன், அவருடைய மனைவியுடன் இருக்கும் சின்ன வயசு போட்டோ... இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்...!

இதையடுத்து தமிழ் நடிகர்களும் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. பல நாட்களாக தயாரிப்பாளர்கள் இதைப்பற்றி கூறினாலும் இயக்குநர் ஹரி, நடிகர் ஹரிஷ் கல்யாண், கோப்ரா பட இயக்குநர் அஜய் ஞானமுத்து உள்ளிட்ட சிலர் மட்டுமே சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். பல முன்னணி நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை காதில் வாங்கி கொண்டதாகவே தெரியவில்லை. 

 

இதையும் படிங்க: இளையராஜா மகனுக்கே இப்படியொரு நிலையா?... மதமாற்றம் வரை யுவனை தள்ளியது இதுதானாம்...!

அழிவின் விளிம்பில் உள்ள தமிழ் சினிமாவை காப்பதற்காக சமீபத்தில் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் ஒன்றிணைந்து தனிக்குழு ஒன்றை கட்டமைத்திருந்தனர். அந்த குழுவினர் நடிகர்கள் சங்கத்தினரை தொடர்பு கொண்டு இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனராம். இன்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் பங்கேற்று இந்த முடிவெடுத்துள்ளனர். இந்த குழுவைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஜே.சதீஷ் கூறியுள்ள படி, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் தங்களது சம்பளத்தை 50 சதவீதமாக குறைத்துக்கொள்ள வேண்டுமென பேசியிருக்கிறார்கள். இதை தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து சாதிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.