சசிக்குமாரின் "பிரம்மன்" படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், குடும்ப பாங்கான கதைகளுக்கு டாட்டா சொல்லிவிட்டு அதிரடி கவர்ச்சிக்கு மாறினார். மேலும் கலர், கலர் மார்டன் டிரெஸில் கவர்ச்சி போஸ் கொடுத்து, அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். 

தற்போது அதற்கு பலனாக பட வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ, ரெய்டு தான் வந்திருக்கு. லாவண்யா திரிபாதி, 30 லட்சம் ரூபாய் வரை ஜி.எஸ்.டி. வரி கட்டாமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஐதராபாத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் லாவண்யா திரிபாதி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார். 

இதை கேள்விப்பட்ட லாவண்யா திரிபாதி, படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு அவசர, அவசரமாக வீட்டிற்கு வந்துள்ளார். அவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் சில கேள்விகளைக் கேட்டதாக கூறப்படுகிறது. 

வீட்டில் இருந்து சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் ரெய்டு நடந்த சம்பம் ஆந்திர திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.