today kamal hassan birthday
இன்று நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் !! மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பள்ளிக்கரணை செல்கிறார்!!!
இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் நடிகர் கமலஹாசன் முக்கிள அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில் மழை வெள்ளம் பாதித்த பள்ளிக் கரணையில் அவர் பொது மக்களை சந்திக்கிறார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் நடிகர் கமல்ஹாசன் இந்த ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்துள்ளார். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
நாளை என்பது மற்றொரு நாளே. வேலை கிடக்குது ஆயிரம் இங்கே. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம். வேளை வரும் என காத்திருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.
இதனிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை பகுதியில் பொது மக்களை சந்தித்து உதவிகளை வழங்கவுள்ளதாக கமல்ஹாசனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
