*    ஜஸ்ட் நான்கே நாட்களில் தனது தர்பார் படத்தின் டப்பிங் பணியை  முடித்துவிட்டார் ரஜினிகாந்த். போலீஸ் அதிகாரி வேடம் என்பதால், ஆக்ரோஷமான  மாடுலேஷன்களுடன் கூடிய வசனங்கள் நிறைய இருந்ததாம். மனுஷன் கொஞ்சம் கூட சளைக்காமல், ரீ டேக் எடுக்காமல் பின்னிப் பேர்த்தெடுத்துட்டாராம். ஏ.ஆர்.முருகதாஸ் செம்ம ஹேப்பி. 

*    நயன்தாரா தனது 35வது பிறந்த நாளை விக்னேஷ் சிவன் உடன் அமெரிக்காவில் கொண்டாடி இருக்கிறார். நியூயார்க் சிட்டியின் வானுயர்ந்த கட்டிடங்கள் பின்னணியில் தெரிய, நயனும் விக்கியும் ரொமான்டிக் மூடில் நிற்கும் படம், இணையத்தில் தெறிக்கிறது. 

*    கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கிறான்’ படம், ஒரு அரசியல் கதை. இதில் மிகப்பெரிய இடைவெளிக்குப் பின் கமல்ஹாசனுடன் இணைகிறார் வடிவேலு. அவருக்கும் இதில் அரசியல்வாதி வேடம்தான்! என்கிறார்கள். ஒரு லட்டர்பேடு கட்சியை வைத்துக் கொண்டு தாட்பூட் என ஸீன் போடும் வடிவேலு, கமலின் கட்சியுடன் கூட்டணி வைக்க படாதபாடு படுவதாய் வரும் காமெடி காட்சிகள் வரும்! என்கிறார்கள். 

*    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் அவருக்கு காலேஜ் இளம் பேராசிரியர் வேடமாம். சாந்தனுவுக்கு முரட்டுத்தனமான ஸ்டூடண்ட் வேடமாம். அப்ப விஜய் சேதுபதி என்ன, முரட்டு சாந்தனுவுக்கு ஹெல்ப் பண்ணுற தாதாவா?

*    ப்ரியா ஆனந்த் வரவர கவர்ச்சி கடலாய் மாறிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடத்தி வெளியிட்டிருக்கும் போட்டோ ஷூட் படங்களைப் பார்த்தால் ரசிகப் பயபுள்ளைகளுக்கு டெங்கு, சிக்கன் குன்யா, மலேரியா, டைபாய்டு என எல்லாவற்றையும் கலந்து கட்டி அடித்தது போல் ஒரு புதுவிதமான காய்ச்சல் படுத்தி எடுக்கிறது. ஏம்மா இப்படி? என்று கேட்டால் ‘இப்ப இல்லாம எப்ப?’ என்கிறது பொண்ணு. 
செம்ம லாஜிதான்.