பிக்பாஸ் வீட்டில் தற்போது அரங்கேறி வரும், பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்க் நேற்றைய தினம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது. மேலும் நேற்றுய விளையாட்டின் போது அர்ச்சனா தான் யாரை முன்னிறுத்தி விளையாடுகிறேன் என கேட்டதற்கு,  சோமசேகர், ரியோ மற்றும் கேபி என மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறினார்.

இந்த டாஸ்க்கில் கால் சென்டர் ஊழியராக ஒவ்வொருவரும் காலராக ஒருவரும் பேச வேண்டும். இதில் கால்செண்டர் ஊழியரை வெறுப்பேற்றும் வகையில் பேசி அவரை போனை வைக்க செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், அந்த காலர் நோமிட்டட் ஆவர்.

நேற்று நடைபெற்ற டாஸ்கில் பாலாஜி-அர்ச்சனா மற்றும் சனம்-சம்யுக்தா ஆகியோருக்கு இடையே டாஸ்க் நடந்தது. இதில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடினார். பாலாஜியையும், சம்யுக்தாவையும் வெறுப்பேற்ற முடியாததால் அர்ச்சனா, சனம் இருவரும் அடுத்த வாரம் நாமினேட் ஆகினர்.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், சோம் கேப்ரில்லாவிடம் பேசுகிறார்.  இருவரும் எந்தவித போட்டியும் பரபரப்பும் இன்றி சிரித்துக்கொண்டே நண்பர்கள் போல் உரையாடினர். ஒரு கட்டத்தில் போனை வைத்து விடுங்கள் என்று சோம் சொல்ல உடனே கேபி வைத்துவிட்டார் போனை வைத்து விட்டதால் அவர் நாமினேட் செய்யப்படுகிறார் என்பதனை சனம் உள்பட ஒருசிலர் சுட்டிக்காட்டியபோது ’ஆமாம் நாம் தெரிந்து தான் வைத்தேன்’ என்று கேபி கூறினார்.

இதனை அடுத்து சனம்ஷெட்டி, பாலாஜி, அனிதா ஆகியோர் பேசி கொண்டிருக்கும் போது..  பாலாஜி ’நேற்று நான் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. எப்ப பார்த்தாலும் பெஸ்ட் பிளேன்னு கொடுக்க ஒருகூட்டம் இருக்கு. அதனால் அவன் விளையாட மாட்றான்’ என்று சோம்சேகரை கூறுகிறார் இதன் மூலம் அர்ச்சனா டீம் முகமூடி அவிழ்ந்துள்ளது.