today big boss elimination raiza

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடலிங் துறையை சேர்ந்த வரும் "வேலை இல்லா பட்டதாரி 2 " திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளவருமான ரைசா கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துக்கொண்டதால் இவருக்காகவே சிலர் "VIP 2 " படத்தை பார்த்தனர்.

இவர் சில நேரங்களில் ஓவியாவை ஒதுக்கிவைத்ததாலும், அவரை திட்டியதால் இவர் மீதும் ஓவியா ரசிகர்களுக்கு கோவம் இருந்தது. 

ஏற்கனவே கடந்த வாரம், காயத்ரியா.. ரைசாவா.. என வந்த போது, ரைசாவை காப்பாற்றிய மக்கள் இந்த முறை, வையாபுரி மற்றும் சினேகனை காப்பாற்றி ரைசாவை வெளியே அனுப்பியுள்ளனர். இதற்கு ஆதாரமாக தற்போது ரைசா கமலுடன் பிக் பாஸ் மேடையில் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் இருந்து கண்டிப்பாக இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்டவர் ரைசா என தெளிவாக தெரிகிறது.