யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வை மாதிரி, பட ரிலீஸ் சமயங்களில் பால் பாக்கெட்டுகள் திருட்டுப்போகாமல் பாதுகாப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடுகிறது என்கிறது தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம்.

’தங்கள் ஹீரோக்களின் பட ரிலீஸ் சமயத்தில் காசுகொடுத்து பால் பாக்கெட்கள் வாங்குபவர்களை விட எங்கள் பூத்களிலிருந்து திருடிக்கொண்டுபோய் பாலாபிஷேகம் செய்பவர்கள்தான் அதிகம். எனவே இனி தமிழகத்தில் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யும் நடைமுறைக்கு நிரந்தர தடைவிதிக்கவேண்டும்’ என்ற கோரிக்கை அடங்கிய புகார் மனு ஒன்றையும் இன்று அச்சங்கம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்தது.

தனது ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்துக்கு அண்டாக்களில் கொண்டுவந்து பாலாபிஷேகம் செய்யுங்கல் என்று தனது ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் வைத்திருப்பதால் நடுநடுங்கிப்போன பால் முகவர்கள் இப்படி அதிரடியாய் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து ரசிகர்கள் பாலைத்திருடித்தான் அபிஷேகம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருப்பது கோடம்பாக்கத்தையே அதிரவைத்துள்ளது.