Asianet News Tamil

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்... மீண்டும் வேகமெடுக்க போகும் சின்னத்திரை... வெளியானது அசத்தல் அறிவிப்பு....!

அரசின் இந்த அறிவிப்பு மூலம் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டால், இல்லதரசிகள் தொடர்ந்து பார்த்து வந்த சீரியல்களில் இருந்து பல புது எபிசோட்டுகள் போனஸாக கிடைக்க வாய்ப்புள்ளது. 

TN Government Announced Happy news for House Wife Serial Post Production Work will be Started on May 11
Author
Chennai, First Published May 8, 2020, 6:10 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

உலகையே உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் திரைத்துறையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 990 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த 19ம் தேதி முதலே அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள் என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். என்ன தான் சினிமாவில் சீரியல் பார்க்கும் பெண்களை கிண்டல் செய்தாலும், 24 மணி நேரமும் வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் தான் முழு நேர தோழி. 

சினிமாவைப் போலவே கொரோனாவால் சீரியல்களுக்கும் பிரச்சனை வந்துவிட்டது. சீரியலில் சினிமாவை போல் இந்த வாரம் இல்லை என்றால், அடுத்த வாரம் ரிலீஸ் என்று அறிவிக்கும் வாய்ப்பே இல்லை. எப்போதும் குறிப்பிட்ட நாட்களுக்கு தேவையான காட்சிகளை மட்டுமே ஷூட் செய்து வைத்திருப்பார்கள். ஏற்கனவே ஷூட் செய்து, போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்த சீரியல்கள் அனைத்தும் ஒளிபரப்பாகிவிட்டன. 

இதையும் படிங்க: கண்களில் கவர்ச்சி ததும்ப கிளாமர் போஸ்... “மாஸ்டர்” நாயகியின் தாராளத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

கையில் ஒன்றுமில்லையே என வாடி நின்ற தொலைக்காட்சிகள் பலவும், ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்த எபிசோட்டை திரும்ப ஒளிபரப்புவது, பழைய ரியாலிட்டி ஷோக்களை தூசி தட்டி போடுவது என்று ரசிகர்களை பொழுது போக்கி வருகின்றனர். அப்படித் தான்  சன் டி.வி.யில் மெட்டி ஒலி, தங்கம் மற்றும் தூர்தர்ஷனில் ராமாயணம் ஆகிய தொடர்கள் டி.ஆர்.பி.யில் பட்டையைக் கிளப்பி வருகிறது. வியூஸ் அதிகம் என்றாலும் எவ்வளவு நாட்களுக்கு தான் மக்கள் பார்த்த சீரியலையே பார்ப்பார்கள். அதுமட்டுமின்றி சின்னத்திரையை மட்டும் நம்பி இருக்கும் தொழிலாளிர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி எழுகிறது.

அதனால் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த குஷ்பு, மீண்டும் சீரியல் ஷூட்டிங்குகளை தொடங்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை பாதுகாப்பாக நடத்துவோம் என்று உறுதி அளித்தார். இந்நிலையில் தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: அம்மாடியோவ்! முடியை வைத்து முன்னழகை மறைத்த இலியானா... பெருமூச்சு விட்ட ரசிகர்கள்...!

அதன் படி, தற்போது படத்தொகுப்பு, டப்பிங், கிராபிக்ஸ் பணிகள், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகள் மே 11 ஆம் தேதி முதல் துவங்கலாம் என தமிழக அரசு சார்பில் தெரிவித்து, சின்னத்திரை மாற்று வெள்ளித்திரைக்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைய சீரியல்களின் ஷூட்டிங்குகள் மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றதாக தெரிகிறது. அவற்றில் பல போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் முடிக்கப்படாததால் ஒளிபரப்பாகமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

அரசின் இந்த அறிவிப்பு மூலம் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டால், இல்லதரசிகள் தொடர்ந்து பார்த்து வந்த சீரியல்களில் இருந்து பல புது எபிசோட்டுகள் போனஸாக கிடைக்க வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் அடுத்த லாக்டவுன் அறிவிப்பு குறித்து தெரிய வரும் வரையிலாவது புது சீரியல்கள் ஒளிப்பரப்பாகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios