டி.கே. இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காட்டேரி'. ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படம் நாளை வெளியாவதாக இருந்தது. இதனிடையே ஸ்டூடியோ கீரின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கொரோனா 2வது அலை பரவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அனைவரின் நலன் கருதி பட வெளியீட்டை தள்ளி வைப்பதாகவும், விரைவில் புதிய தேதி குறிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மெல்ல மெல்ல தியேட்டர்கள் இயல்புநிலைக்கு திரும்பி வரும் இந்த சமயத்தில் கொரோனா 2வது அலை பரவி வருவதால் படத்தை வெளியிடவில்லை என தெரிவித்திருப்பது தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: சூர்யா, விஜய்சேதுபதியை அடுத்து ஜெயம் ரவி கொடுத்த ஷாக்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பெரும் வருத்தமளிக்கக் கூடியது. படம் வெளியிடுவது, வெளியிடாமல் இருப்பது எல்லாம் அவர்களுடைய சொந்த விருப்பம். எங்களுடைய சொந்தக் காரணங்களுக்காக வெளியிடவில்லை என்று சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து கரோனா இரண்டாம் அலை என்று தேவையில்லாத வதந்தியைப் பரப்புவது மிகவும் வருந்தத்தக்கது.

 

இதையும் படிங்க: காதலி நயன்தாராவை அவசர அவசரமாக சென்னை அழைத்து வந்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் ஏர்போர்ட் போட்டோஸ்...!

மத்திய அரசின் சுகாதாரத் துறைக் குழுவினர் நேற்றைய முன் தினம் கூட்டமொன்றைக் கூட்டினார்கள். அதில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பிலும் கலந்து கொண்டார்கள். அதில் கரோனாவின் 2-வது அலை இந்தியாவில் வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அப்படியிருக்கும்போது இவர்களாக உருவகப்படுத்தி இதேபோன்று சொல்வது மிகவும் வருத்தத்திற்குரியது.  இப்போதுதான் திரையரங்கிற்கு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தேவையில்லாத வதந்திகளைப் பரப்பி வருகிறீர்கள். மிகவும் வருந்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.