கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது விழா ஒன்றில் பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கோவில்களை பராமரிக்கும் அளவிற்கு பள்ளி மற்றும் மருத்துவமனைகளை பராமரிப்பது அவசியம். உண்டியலில் காசு போடுகிறீர்கள் அதே போல் மருத்துவமனைகளுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் கட்டிடம் கட்ட நிதி உதவி செய்யுங்கள் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

இந்த பிரச்சனை சோசியல் மீடியாவில் விவாதப் பொருளாக மாறியது. ஜோதிகாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் குவிய ஆரம்பித்தன. கோவில்களை பற்றி தவறாக பேசிய ஜோதிகா இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையிலும் ஜோதிகா சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், அறிஞர்கள், ஆன்மிகப், பெரியவர்களின் எண்ணங்களை பின்பற்றி வெளிப்படுத்திய அந்த கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: இதுல முத்தம் வேற... டாப் ஆங்கிளில் அப்பட்டமாக முன்னழகை காட்டிய மீரா மிதுனை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்...!

இந்நிலையில் பள்ளி ஆசிரியை ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல், ஜோதிகாவின் பேச்சை பிரதிபலிக்கும் விதமாக உள்ளதாக கருத்துக்கள் பரவிவருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம், செல்லரப்பட்டி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் கற்பகவள்ளி என்பவர், திருப்பதி உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக ரூ.40 ஆயிரத்தை சேர்த்துவைத்துள்ளார். 

இதையும் படிங்க: க்யூட் பேபி டூ “பிக்பாஸ்” செலிபிரிட்டி வரை... நடிகை ஓவியா பொக்கிஷமாக பொத்தி வைத்த அரிய புகைப்பட தொகுப்பு...!

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏராளமான ஏழை மாணவர்கள் உணவின்றி தவிப்பதை கண்ட கற்பகவள்ளி, தனது ஊரட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் எல்.கே.ஜி., யூ.கே.ஜி.  மழலையர் பள்ளி மாணவர்களின் குடும்பங்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் தலா 1000 ரூபாயை வழங்கியுள்ளார். இந்த ஆசிரியர் தம்பதியின் நெகிழ்ச்சியான செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.