சமூக வலைத்தளங்களில் இருக்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை கொலை செய்ய திட்டம் போடுவதாக, ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் அலறி அடித்து கொண்டு புகார் கொடுத்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் இருக்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தன்னை கொலை செய்ய திட்டம் போடுவதாக, ரவுடி பேபி சூர்யா காவல் நிலையத்தில் அலறி அடித்து கொண்டு புகார் கொடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆரம்பக்கால வரலாற்றை கூறும் 'மேதகு'..!

இன்று காலை தான் எம்.எம்.கே முகைதீன் இப்ராஹிம் என்பவர், ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா போன்றவர்கள் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டு வருவதாக கூறி, ஜி.பி.முத்து மீது புகார் கொடுத்த நிலையில், இந்த பிரச்சனை முடிவதற்குள் தன்னை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக டிக் டாக்கில் கண்டமேனிக்கு பேசி பிரபலமான ரவுடி பேபி சூர்யா தற்போது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இவர் தற்போது திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையம் என்ற பகுதியில் வசித்து வருகிறார். லைக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தடை செய்யப்பட்ட செயலியான டிக்டாக் உபயோகத்தில் இருந்த போது, ஆபாசத்திற்கு பஞ்சம் இல்லாத வகையில், உடை அணிந்து இடுப்பை ஆட்டி ஆட்டி டான்ஸ் ஆடி பல்வேறு விமர்சனத்திற்கு ஆளானவர். தன்னை விமர்சிப்பவர்களையும் விட்டு வைக்காமல் கண்டமேனிக்கு கெட்டவார்த்தை பேசி வீடியோ வெளியிட்டு பிரபலமானார். 

மேலும் செய்திகள்: 150 கோடியில் இவ்வளவு வசதிகளுடன் கட்டப்படுகிறதா தனுஷின் புதிய வீடு..? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்..!

இவருக்கு கிடைத்தது நெகடிவ் ஃபேம் என்றாலும், சில குறும்படங்களில் கிடைக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அவ்வப்போது யுடியூபில் அத்துமீறும் அளவிற்கு பேசியும் வாங்கி கட்டிக்கொள்கிறார். இவரது தொல்லை தாங்க முடியாமல் நெட்டிசன்களும் இவரை வாயிக்கு வந்தபடி வசைபாடுவது வழக்கம் தான். 

இது ஒருபுறம் இருக்க, தன்னை சுமார் 4 பேர் கொண்ட கும்பல், கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அவர்களுக்குள் பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும் நல்லூர் காவல் நிலையத்தில், சூர்யா புகாரளித்துள்ளார் எந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.