150 கோடியில் இவ்வளவு வசதிகளுடன் கட்டப்படுகிறதா தனுஷின் புதிய வீடு..? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்..!
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் தனுஷின், புதிய வீடு குறித்த சில சுவாரஸ்ய தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தனுஷ் தனது மாமனார் ரஜினி வசிக்கும் போயஸ்கார்டன் இல்லத்திற்கு அருகிலேயே... ஒரு புதிய வீட்டை கட்டும் பணியை துவங்கியுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இப்படத்தின் பூமி பூஜை சமீபத்தில் போடப்பட்டது, இதில் தனுஷின் உறவினர்கள் பெற்றோர், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
தனுஷ் வெளிநாட்டில் இருந்தாலும், வீடு காட்டும் பணி, அரசு தளர்வுகள் அறிவித்த பின்னர் தொடர்ந்து நடந்து வருவதாகவே கூறப்படுகிறது.
சுமார் 150 கோடிக்குமேல் செலவு செய்து தனுஷ் பார்த்து... பார்த்து இந்த வீட்டை கட்டி வருகிறாராம். இந்த வீட்டில் அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நீச்சல் குளம் வசதி, நவீன உடல்பயிற்சி கூடம், மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோம் தியேட்டர் வசதியும் இடம்பெற உள்ளதாம். மேலும் இன்னும் பிற வசதிகளையும் செய்ய தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் தீபாவளிக்கும் கட்டி முடித்து கிரஹப்பிரவேசம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், லாக் டவுன் காரணமாக வீடு கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே வீடு கிரஹப்பிரவேசம் செய்வதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.