ticket movie special show release in England
எந்திரன், நஞ்சுப்புரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவரும் ஜோடி நம்பர் 1, மானாட மயிலாட, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவருமான நடிகர் ராகவ் ரங்கநாதன் "டிக்கெட்" எனும் படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இல்யுசன்ஸ் இன்பினிட் சார்பாக ப்ரிதா தயாரிக்கும் "டிக்கேட்" படத்தில் ராகவ் ரங்கநாதன், கார்த்திக் குமார், லக்ஷ்மி பிரியா, சனம் ஷெட்டி, ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
லண்டனில் உள்ள பாரம்பரியமிக்க எம்பயர் லிய்சிஸ்டர் ஸ்குயர் தியேட்டரில் "லண்டன் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் (LIFF) 2017" சார்பில் டிக்கெட் படம் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது மேலும் லண்டனிலும் பிர்மின்கமிலும் இப்படம் திரையிடப்படவுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் மூன்று இடங்களில் ப்ரத்யேகமாக திரையிடப்படும் முதல் தமிழ் படம் டிக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ள து
