துணிவு படத்தின் அடுத்த பாடல் குறித்து சுட சுட வெளியான அப்டேட்! ஜிப்ரன் வெளியிட்ட தகவல்!

அஜித் நடித்துள்ள துணிவு படத்தில் இருந்து விரைவில் 'காசேதான் கடவுளடா' என்கிற இரண்டாவது சிங்கள் பாடல் வெளியாக உள்ளது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரன் சூசகமாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்து மூலம் தெரிவித்துள்ளார்.
 

thunivu movie second single kasethaan kadavulada release soon

இயக்குனர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீசாக உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த படத்தின் இசை இசையமைப்பாளரான ஜிப்ரன்.

thunivu movie second single kasethaan kadavulada release soon

துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே, அதிக லைக்குகளை குவித்த பாடல் என சாதனையை படைத்தது. இதை தொடர்ந்து 'சில்லா சில்லா' பாடல் வெளியான சில தினங்களிலேயே, 20 மில்லியன் பார்வையாளர்களை நோக்கி சென்று சென்று கொண்டிருக்கிறது.

மேலும் செய்திகள்: நிற்க முடியாத மாற்று திறனாளி ரசிகரை... குழந்தை போல் கையில் ஏந்தியபடி போஸ் கொடுத்த விஜய்! வைரலாகும் புகைப்படம்!

thunivu movie second single kasethaan kadavulada release soon

மேலும் 'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது சிங்கிள் பாடலான, 'காசேதான் கடவுளடா' பாடல் விரைவில் வெளியாகும் என்பதை, தன்னுடைய சமூக வலைதளத்தின் சமூக வலைதள பக்கத்தின் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரன். மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த மூன்று பாடல்களுமே படம் வெளியாவதற்குள் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, மஞ்சுவாரியர், நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வீரா, ஜான் கொகைன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது எப்படி நடந்தது? ஒரே புகைப்படத்தில் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்த விஜய் சேதுபதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios