thulkarsalmaan news

தமிழில் வாயை மூடி பேசவும் படத்தில் அறிமுகம் கொடுத்தவர், மலையாள சூப்பர்ஸ்டார் மகன், துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ காதல் கண்மணி படம் இவருக்கு தமிழிலும் நிறைய ரசிகர்களை உருவாக்கியது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இவருக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. 

இந்த செய்தியை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அவர் கூறிய அடுத்த நிமிடமே இதுதான் துல்கர் சல்மானின் குழந்தை என்று கூறி நிறைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

இதனை பார்த்த துல்கர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தயவுசெய்து யாரும் தவறான புகைப்படத்தை வெளியிட வேண்டாம். என்னால் முடியும் போது நான் உங்களுக்கு பகிறுகிறேன் என்று கடுப்பாக கூறியுள்ளார்.