கடந்த வருடம் நடிகை திரிஷா, தயாரிப்பாளர் வருண் மணியத்தை காதலிப்பதாக அறிவித்து , இவர்களது காதல் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்றது. 

பின்னர் இருவருக்கும் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறி அது திருமணம் வரை செல்லாமல் பிரிந்துவிட்டனர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் தற்போது திரிஷாவின் முன்னாள் காதலர் வருண்மணியத்தை கழுகு, பசங்க 2,ஜாக்சன் துரை போன்ற படங்களில் நடித்து முன்னனி நாயகியாக வளர்ந்து வரும் பிரபல நடிகை பிந்துமாதவி காதலிப்பதாக கூறப்படுகிறது.

இந்த காதலை உறுதி படுத்தும் விதமாக இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

இந்த புகைப்படங்களை பிந்துமாதவியே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாகவும், ஆனால் திடீரென அவரே அந்த புகைப்பட பதிவுகளை நீக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இருவரும் நெருக்கமாக பல இடங்களில் சுற்றி திரிவதாகவும் விரைவில் திருமண அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது .... இது எந்த அளவிற்கு உண்மை என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.