’பேட்ட’ படத்துக்கு தன் பங்குக்கு ஏதாவது விளம்பரம் செய்யவிரும்பியோ என்னவோ தான் தான் பல வருடங்களுக்கு முன்பு ஈடுபட்ட ஒரு குட்டித் திருட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்திருக்கிறார் நடிகை த்ரிஷா.

தமிழில் எல்லா ஹீரோக்களுடன் நடித்துமுடித்துவிட்ட த்ரிஷாவுக்கு ‘பேட்ட’ படத்தின் மூலம் ரஜினியுடன் நடைக்கவேண்டுமென்ற கனவும் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது பட ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் பரபரப்பில் இருக்கவேண்டும் என்கிற  ஒரே காரணத்துக்காக தனது இன்ஸ்டாகிராம்  ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அதில்,’ சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில்  தோழியுடன் ஒரு கடைக்குப் போயிருந்தபோது இரண்டு வாழைப் பழங்களைத் திருடிவிட்டுக் காசு தராமல் எஸ்கேப் ஆகிவிட்டோம். அப்போதைக்கு அது படு த்ரில் ஆக இருந்தது.

உண்மையில் திருடுவது நோக்கமல்ல. அந்த சமயம் பர்ஸ் எடுத்துப்போக மறந்ததால் கைவசம் பணமில்லை. வாழைப்பழங்களின் விலை ரெண்டு டாலர்தான் என்றாலும் திருட்டு திருட்டுதான். இனிமேல் அதுபோல் செய்யமாட்டேன்’ என்றும் கூறியுள்ளார்.