தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டாரும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாண் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகில் ரசிகர்கள் பாசமாக பவர் ஸ்டார் என அழைக்கும் பவன் கல்யாண், ஜன சேனா என்ற கட்சி மூலம் அரசியலிலும் கால் பாதித்தவர். இதனால் பவன் கல்யாணுக்கு ஆதரவாக ரசிகர்கள், தொண்டர்கள் என மிகப்பெரிய படையே உள்ளது. அதனால் பிறந்த நாள் கொண்டாட்டமும் வேற லெவலுக்கு களைகட்டி வந்தது. 

 

இதையும் படிங்க: “கே.ஜி.எஃப்” ஹீரோ மகனுக்கு பெயர் வச்சாச்சு... ரொம்ப யோசிச்சு எப்படிப்பட்ட பெயரை தேர்வு செஞ்சிருக்கார் பாருங்க!

ஊர் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், தோரணம் என பவன் கல்யாண் பிறந்தநாளை ரசிகர்கள் மாஸாக கொண்டாடி வந்த நேரத்தில் அதிர்ச்சியளிக்கும் விதமாக துக்க சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம் சாந்திபுரம் பகுதியில் பவன் கல்யாண் ரசிகர்கள் 6 பேர் பேனர் நேற்று இரவு 8.30 மணி அளவில் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இரும்பு சட்டங்களில் பொருத்தப்பட்ட பிளக்ஸ் பேனரை சாலையோரம் வைக்க முயன்ற போது, அது மின்கம்பியில் மோதியுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

இதையும் படிங்க: இதை மட்டும் செய்தீர்கள் என்றால்? மறக்க முடியாத முதல்வர் என உங்களை உயர்த்தி பிடிப்போம்... பாரதிராஜா வேண்டுகோள்!

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பவன் கல்யாணம் ரசிகர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது எனது கடமை என்றும் வாக்கு தெரிவித்துள்ளார். மேலும் மேலும்  3 இளைஞர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஜன சேனா கட்சி அறிவித்துள்ளது.  இதேபோல் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் “பிங்க்” படத்தில் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார்.