ஏற்கனவே இயக்குனர் பாலா 'வர்மா' படத்தில் இருந்து வெளியேறிய பின்,  நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அந்த தகவல் உறுதி செய்யப்படாத  நிலையில் தற்போது மீண்டும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதாவது இரண்டு நாயகர்கள் நடிக்கும் படத்தை பாலா இயக்க உள்ளாராம். ஏற்கனவே விக்ரம் - சூர்யாவை வைத்து 'பிதாமகன்' ஆர்யா - விஷாலை வைத்து 'அவன் இவன்' ஆகிய இரண்டு நடிகர்கள் படத்தை இயக்கியுள்ளார். 

இதைத் தொடர்ந்து அடுத்ததாக அதர்வா மற்றும் ஆர்யா நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதர்வா இயக்குனர் பாலா இயக்கத்தில் 'பரதேசி' படத்தில் நடித்தவர். அதேபோல் ஆர்யாவும் 'நான் கடவுள்', 'அவன் இவன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஆர்யா - அதர்வா - ஜி.வி.பிரகாஷ் மீண்டும் இணைவது உறுதியாகிவிடும்.