Thodari sathriyan loss to compensate vivekam producer asks ajith...

‘தொடரி’, ‘சத்ரியன்’ படங்களின் நட்டத்தை ஈடு கட்ட மீண்டும் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டுள்ளார் விவேகம் தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன்.

அஜீத் தற்போது நடித்து வரும் ‘விவேகம்’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்து வருகிறார்.

அஜீத் & சிவா மூன்றாவது இணைந்துள்ள படம் ‘விவேகம்’. இந்தப் படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் வெளியான தனுஷ் நடித்த ‘தொடரி’, விக்ரம் பிரபு நடிப்பில் இந்தாண்டு வெளியான ‘சத்ரியன்’ ஆகிய இரண்டு படங்களும் படு தோல்வியடைந்தது. இந்த இரண்டு படங்களையும் சத்யஜோதி பிலிமஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

எனவே, “விவேகம்” மட்டும்தான் இவர்களுக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும் ஒரே படம். ஆனாலும், இந்த ஒரு படத்தின் மூலம் மட்டுமே அவர்களால் நட்டத்தை ஈடுகட்ட முடியாது.

எனவே, அதிலிருந்து மீள வேண்டுமென்றால் மறுபடியும் அஜீத்தை வைத்து ஒரு படத்தை எடுத்தால்தான் முடியும் என்ற நிலைமைக்கு வந்து விட்டது தயாரிப்பு நிர்வாகம்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் அஜீத்திடம் மீண்டும் ஒரு படம் எங்கள் நிறுவனத்திற்கு நடித்துத் தர வேண்டும் அதற்கு உங்கள் கால்ஷீட் வேண்டும் என்று கேட்டுள்ளார்.